உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெயரளவில் தற்காலிக சர்வீஸ் ரோடு: பள்ளத்தில் சிக்கிய லாரி

பெயரளவில் தற்காலிக சர்வீஸ் ரோடு: பள்ளத்தில் சிக்கிய லாரி

ராமநாதபுரம், - ராமநாதபுரம் அருகே புத்தேந்தலில் புதிய தார்சாலை அமைக்கும் பணியில் தற்காலிக சர்வீஸ் ரோடு பெயரளவில்அமைத்துள்ளதால் சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.3 கோடியில் புத்தேந்தல் முதல் உத்தரகோசமங்கை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதையடுத்து குறுகிய இடங்களில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக தற்காலிக சர்வீஸ் ரோடு அமைத்துள்ளனர். இவை பெயரளவில் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் போது பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. தற்போது வயல்களில் அறுவடை முடிந்து நெல் மூடைகளை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இதையடுத்து தற்காலிக சர்வீஸ் ரோட்டில் பள்ளத்தை சீரமைத்து தரமாக அமைத்துத்தர வேண்டும் என வாகன ஓட்டிகள், விவசாயிகள் வலியுறுத்தினர்.இதுகுறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சந்திரன் கூறுகையில், தற்காலிக சர்வீஸ் ரோடு தரமாக அமைக்கப்படுகிறது. வயல்வெளியை ஒட்டியுள்ள இடங்களில் கனரக வாகனம் செல்லும் போது பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதுபோன்ற இடங்களை கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ