உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புயல் மழையில்லை அதிகாரிகள் நிம்மதி

புயல் மழையில்லை அதிகாரிகள் நிம்மதி

திருவாடானை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் நேற்று தீவிர புயலாக வலுவடைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக திருவாடானை தாலுகாவில் வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், தொண்டி பேரூராட்சி அலுவலர்கள், மீன்வளத்துறையினர், மரைன் போலீசார் என பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தனர். மீட்பு பணிகளில் ஈடுபட அவசர கால ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத் தாலுகாவில் துாறல் மழை கூட பெய்யவில்லை. இதனால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை