மேலும் செய்திகள்
டூவீலர் மீது பஸ் மோதல்: ஒருவர் கால் துண்டிப்பு
23-Jul-2025
போலீஸ் செய்திகள்..
26-Jul-2025
கீழக்கரை; ஏர்வாடியில் இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். ஏர்வாடி யாதவர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் 45. இவர் டூவீலரில் ஏர்வாடி தர்காவில் இருந்து வடக்கு நோக்கி தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே டூவீலர் ஓட்டி வந்த ஏர்வாடி மெய்யன்வலசையை சேர்ந்த தினேஷ் ராஜ் 17, பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 19, ஆகியோர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவரும் காயமடைந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த முருகானந்தம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த தினேஷ் ராஜ் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jul-2025
26-Jul-2025