மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
திருவாடானை: திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 58. வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அலைபேசிக்கு சார்ஜ் போட முயன்றார். சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருகிய போது மின் கசிவால் மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.