உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊட்டி   இலந்தைப்பழம்  விற்பனை ஜோர்

ஊட்டி   இலந்தைப்பழம்  விற்பனை ஜோர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சந்தைக்கும் ஊட்டி, கொடைக்கானலில் விளைவிக்கப்படும் பெரிய ரக இலந்தை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி நடக்கிறது. இதன் காரணமாக வெளியூர்களிலிருந்து காய்கறி, பழங்களை வாங்கி வந்து ராமநாதபுரம் சந்தையில் வியாபாரிகள் விற்கின்றனர். தற்போது ஊட்டி, கொடைக்கானல் மலையில் விளையும் பெரிய, சிறிய ரக இலந்தைப்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சற்று பருமன் கொண்ட சிவப்பு, பச்சை வண்ண இலந்தை கிலோ ரூ.60 முதல் ரூ.70க்கும், ஆப்பிள் போல பெரியதாக உள்ள பச்சை நிற இலந்தை பழங்கள் கிலோ ரூ.80க்கு விற்கிறது. நீர்சத்து மிகுதியாக உள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை