உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆனந்துார் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

ஆனந்துார் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.ஆனந்துார் அதனை சுற்றியுள்ள திருத்தேர்வளை, கருங்குடி, கூடலுார், நத்தக்கோட்டை, ஆயங்குடி, கற்காத்தகுடி, வண்டல், அளவிடங்கான், விசவனுார் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் இயந்திரங்கள் வயல்களுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு அறுவடை பணி தாமதமடைந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் மழை நின்றதால் தற்போது மீண்டும் நெல் அறுவடை பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ