பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் சேதம்: விபத்து அபாயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் ஏராளமான வாகனங்களில் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக வருகின்றனர். 37 ஆண்டுகளை கடந்த இந்த பாலம் 3 ஆண்டுகளுக்கு முன்பு பலமிழந்து தடுப்பு சுவர் சேதமடைந்து, துாணில் விரிசல் ஏற்பட்டதால் 2023ல் பராமரிப்பு பணிகள் செய்தனர். 2 கி.மீ., நீளமுள்ள இந்த பாலத்தின் சாலையில் தற்போது பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இரவில் பாலத்தில் செல்லும் பயணிகள் பீதி அடைகின்றனர். சேதமடைந்த சாலையை புதுப்பிக்க தேசிய நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.