உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர், கார் ஸ்டாண்டாக பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்; பயணிகள் அவதி

டூவீலர், கார் ஸ்டாண்டாக பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்; பயணிகள் அவதி

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தும் ரேக்குகளில் டூவீலர், கார்களை நிறுத்துவதால் பயணிகள் குறுகிய இடத்தில் அவதிப்படுகின்றனர்.பரமக்குடி நகரின் மையப்பகுதியில் பஸ்ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கிருந்து 75 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் முதுகுளத்துார், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சாயல்குடி உள்ளிட்ட அனைத்து பணிமனைகளில் இருந்தும் புறப்படும் பஸ்கள் பரமக்குடி வந்து செல்கின்றன.மேலும் மதுரை, கும்பகோணம் கோட்டங்களில் இருந்து தினமும் 250 பஸ்கள் வரை வந்து செல்கின்றன. இந்நிலையில் டவுன் பஸ்கள் மற்றும் தொலைதுாரம் மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை நிறுத்த ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பஸ்களை நிறுத்த இடம் கொடுக்காத வகையில் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்துகின்றனர். இதனால் ஏற்கனவே நெரிசலில் தவிக்கும் பஸ் ஸ்டாண்டில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.காலை, மாலை நேரங்களில் அதிகமான பஸ்கள் ஒரே நேரத்தில் உள்ளே வரும் போது நிறுத்த இடமின்றி டிரைவர்கள் தவிக்கின்றனர். இதே போல் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி டூவீலர்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை