மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
20 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
20 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
20 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
20 hour(s) ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடை அமைக்கப்படுவதோடு ரயில்களை நிறுத்த பிட்லைன் அமைத்து கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் ரயில் பாதையில் ராமநாதபுரம் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 6:45, 7 :25, மதியம் 12:03, இரவு 7:03 மணி ஆகிய நேரங்களில் முன் பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இரவு 9:55 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஓகா வாராந்திர ரயில் வெள்ளிக் கிழமைகளில் 11:25 மணிக்கு இயக்கப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம் ரயில் நிலைய விரிவாக்கப் பணியும், பாம்பன் பாலப் பணிகளும் நடப்பதால் தற்காலிகமாக ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து சில ரயில்களும் இயக்கப்படுகின்றன. புவனேஸ்வர் ரயில் ஞாயிறுதோறும் இயக்கப்படுகிறது.செகந்திராபாத் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9:50 மணிக்கு இயக்கப்படுகிறது. ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் திருப்பதிக்கு மாலை 5:18 மணிக்கு புறப்படுகிறது. போர்ட் மெயில் விரைவு வண்டி சென்னைக்கு தினமும் மாலை 6:28க்கு இயக்கப்படுகிறது. தினசரி இரவு 9:20க்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் இயக்கப்படுகிறது.கோவைக்கு புதன் இரவு 8:13க்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தனை ரயில்கள் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்து எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தற்போது மூன்று நடைமேடைகள் உள்ளன. ஒன்று மெயின் லைனாகவும், மற்றொன்று மாற்று பாதைக்காகவும், மற்றொன்று சரக்கு ஏற்றி இறக்க என மூன்று நடைமேடைகள் மட்டுமே உள்ளன.ரயில்கள் நிறுத்தம் செய்வதற்கு வசதியாக பிட் லைன்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. ரயில்கள் பராமரிப்பு பணிக்கான ரயில்வே லைன்களும் இல்லாத நிலையில் நெருக்கடியில் ராமநாதபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ரயில்களை நிறுத்தி எடுப்பதற்காக கூடுதல் நடைமேடைகள், பிட் லைன்கள் அமைத்து ராமநாதபுரத்தை தெற்கு ரயில்வேயில் முக்கியமான முனையமாக மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago