மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் ஏ.சி., இயங்கவில்லை. பஸ்சுக்குள் காற்று வராமல் மூடப்பட்டதால் பயணிகள் மூச்சு முட்டியபடி பயணித்து சிரமப்பட்டனர்.ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி., பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன. இந்த பஸ்கள் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் ஏ.சி., இயங்காததால் பயணிகள் கண்டக்டருடன் இரு மாதங்களுக்கு முன் தகராறு செய்தனர். டி.என். 63 என் 2040 என்ற பதிவெண் கொண்ட பஸ் ராமநாதபுரத்தில் இருந்து நேற்று காலை 11:30 மணிக்கு மதுரைக்கு இயக்கப்பட்டது. ஏ.சி., இயங்கவில்லை. இதன் காரணமாக பஸ்சுக்குள் காற்று வராததால் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் மூச்சு முட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. ராமநாதபுரம்-மதுரைக்கு ரூ.130க்கு கட்டணம் வசூலிக்கின்றனர். பயணிகள் நலன் கருதி இனி வரும் காலங்களிலாவது அரசு ஏ.சி., பஸ்கள் முறையாக பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago