உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் 5 மாதங்களாக அலைக்கழிக்கப்படும் மக்கள்; வாரம் இருமுறை பணியால் அவதி

பரமக்குடியில் 5 மாதங்களாக அலைக்கழிக்கப்படும் மக்கள்; வாரம் இருமுறை பணியால் அவதி

பரமக்குடி; பரமக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் (ஆர்.டி.ஓ.,) பணியிடம் 5 மாதமாக காலியாக உள்ள நிலையில் வாரம் இருமுறை மட்டுமே பணிகள் நடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பரமக்குடியில் 2007ம் ஆண்டு மோட்டார் வாகன பகுதி அலுவலகம் துவக்கப்பட்டது. இங்கு ஆய்வாளர் உட்பட 5 பேர் பணிபுரிந்தனர். இதன்படி பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி ஆகிய 4 தாலுகாக்களை உள்ளடக்கி அலுவலகம் செயல் படுகிறது. இங்கு மார்ச் மாதம் துவங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து ஆய்வாளர் தங்கராஜ், செவ்வாய், வியாழன் என இருமுறை மட்டுமே பணிக்கு வரும் நிலை உள்ளது. இதனால் எப்.சி., புதுப்பித்தல், புதிய பதிவெண் வழங்குதல் ஆகிய பணிகள் முடங்கி உள்ளது. மேலும் டூவீலர், ஆட்டோ, நான்கு சக்கர வாகனம் உரிமம் பெறுதல், பேட்ச் உள்ளிட்ட உரிமம், காலாவதியை புதுப்பித்தல் என ஒவ்வொரு நாளும் 200 முதல் 250 பேருக்கு மேல் வருகின்றனர். இதனால் காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை காத்திருக்கும் சூழல் உண்டாகிறது. இதன் காரணமாக கல்லுாரி மாணவர்கள், அரசு, தனியார் பணிகளுக்கு செல்வோர் என குறிப்பிட்ட நாளில் வர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதுடன், பணிக்கு விடுப்பு கேட்டு வரும் நிலையில் அவதி அடைகின்றனர். மேலும் கூடுதல் கட்டணம் செலுத்தி பணிகளை முடிக்க நிர் பந்திக்கும்படி இருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். ஆகவே பரமக் குடியில் மோட்டார் வாகன ஆய்வாளரை (ஆர்.டி.ஓ.,) நிரந்தரமாக நியமித்து தொடர்ந்து அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ