உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சேறும் சகதியுமாக மாறிய சாயல்குடி சாலைகள் மக்கள் வேதனை

 சேறும் சகதியுமாக மாறிய சாயல்குடி சாலைகள் மக்கள் வேதனை

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் நடக்கிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சாலையின் நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் பள்ளம் தோண்டி அவற்றிலிருந்து குடிநீர் இணைப்புகளுக்கான பைப்லைன் வழங்கப்பட்டுள்ளது. பல தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளில் முறையாக மீண்டும் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் பல இடங்கள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பேவர்பிளாக் சாலையின் பக்கவாட்டு பகுதியில் பிரிக்கப்பட்ட கற்கள் தற்போது வரை மீண்டும் பதிக்கப்படாமல் விட்டுள்ளதால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோர் காயம் அடைகின்றனர். சாயல்குடி பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் மாணிக்கவள்ளி கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட அரண்மனை தெரு, சதுரயுகவல்லி நகர், காயம்பு கோவில் தெரு, அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை மீண்டும் சரி செய்யாமல் விட்டுள்ளதால் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதுகுறித்து சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் கலெக்டர் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஜல் ஜீவன் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தங்களது திட்டத்தில் குறிப்பிட்டபடி பழைய நிலைக்கு சாலையை கொண்டு வர வேண்டும். அப்படியே போட்டு செல்லும் மெத்தனப் போக்கால் பொதுமக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி