உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்

 ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட டிஜிட்டல் நுாலகத்தை விரைந்து திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி 1995--96 ம் கல்வியாண்டில் துவக்கப்பட்டது. 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 2024--25 திட்டத்தில் டிஜிட்டல் நுாலகம் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் சேர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வந்துள்ளன. தொடர்ந்து அனைத்து வகையான புத்தகங்களையும் டிஜிட்டல் வாயிலாக படிக்கும் வகையில் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட வேண்டும். மேலும் நுாலகம் அமைந்துள்ள கல்லுாரி வளாகத்தில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கும் சூழலில் ரோடு வசதியை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப்படியான கம்ப்யூட்டர்களை நிறுவி விரைவில் நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை