உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் வீசிய தங்கக் கட்டிகளை 2வது நாளாக தேடும் போலீசார்

கடலில் வீசிய தங்கக் கட்டிகளை 2வது நாளாக தேடும் போலீசார்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே கடலில் வீசிய தங்கக் கட்டிகளை 2-வது நாளாக இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.பிப்.23ல் இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளை கடற்கரைக்கு பைபர் கிளாஸ் படகில் 3 கடத்தல்காரர்கள் 10 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தனர்.அங்கு ரோந்து வந்த இந்திய கடலோரக் காவல் படை கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றனர். ஒருவர் கடலில் குதித்து தப்பினார். இருவர் சிக்கினார்கள்.வேதாளை கடற்கரையில் இருந்து 300 மீ., தொலைவில் கடலில் வீசிய தங்கக் கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டாம் நாளான நேற்று காலை முதல் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் 6 பேர் தங்க கட்டி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால் நேற்று மாலை 5:00 மணி வரை தங்க கட்டிகள் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை