உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போலீசார் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக வேண்டும்

 போலீசார் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக வேண்டும்

பரமக்குடி டி.எஸ்.பி., அறிவுரைபரமக்குடி: பரமக்குடியில் போலீசாரின் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், போலீசார் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும், என்று டி.எஸ்.பி., ஜெபராஜ் தெரிவித்தார். பரமக்குடியில் கடந்த வாரம் டி.எஸ்.பி., ஜெபராஜ் பொறுப்பேற்றார். நேற்று தனியார் பள்ளி மைதானத்தில் அனைத்து ஸ்டேஷன் போலீசார் பங்கேற்ற ஆண்டு ஆய்வு ஒத்திகை நடந்தது. அப்போது நடை பயிற்சி, ஆயுதம் மற்றும் லத்தி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் போலீசாரின் 'நீட் டர்ன் அவுட்' சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து முடி திருத்தம், சீருடை, ஷூ பாலிஷ் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டு போலீசாருக்கு மாவட்ட அளவில் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அனைத்து போலீசாரின் உடை உள்ளிட்ட பொருட்கள் ஸ்டேஷன் வாரியாக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. டி.எஸ்.பி., ஜெபராஜ் பேசுகையில், ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக சரி செய்யப்படும். அதற்கு இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். போலீசார் பொது மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் டூவீலர்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது, கார்களில் சீட் பெல்ட் அணிவது அவசியம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள் கண்காணிக்கப்படுவர். போலீசாரின் நலன் கருதி வழங்கப்படும் நிவாரணங்கள் உரியவர்களுக்கு சென்று சேர உரிய முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை