உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் போலீசார் இரவுநேர ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்

 பரமக்குடியில் போலீசார் இரவுநேர ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கைபரமக்குடி: -பரமக்குடியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் சூழலில் போலீசார் இரவு நேர ரோந்துபணியை அதிகப்படுத்த வேண்டும், என பொதுமக்கள், வியாபாரிகள் வலி யுறுத்தினர். பரமக்குடி நகராட்சி 36 வார்டுகள் மற்றும் விரிவு படுத்தப்பட்ட பகுதிகள் என வளர்ந்து வரும் நகராக உள்ளது. 2002 கணக்கீட்டின்படி ஒரு லட்சம் மக்கள் வசித்த நிலையில், தற்போது மேலும் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் இருந்து தினம் 25,000 மேற்பட்டோர் வேலை, கல்வி சம்பந்தமாக வந்து செல்கின்றனர். பரமக்குடியில் மது, போதை பொருள் விற்பனை அதிகரிக்கும் நிலையில் கொள்ளை, கொலை குற்ற சம்பவங்களும் தொடர்கிறது. இதன்காரணமக போலீசார் இரவு 11:00 மணிக்கு கடைகளை அடைக்க கூறுகின்றனர். வைகை ஆறு உட்பட மக்கள் நடமாடும் பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரி களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ