சர்ச்சில் நடந்த பொங்கல் விழா
ஆர்.எஸ்.மங்கலம்:' ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரெகுநாத மடை கிராமத்தில் செபஸ்தியார் சர்ச் வளாகத்தில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கிராமத்தார் சார்பில் பொங்கல் பொருட்களை சர்ச்சில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் பொருட்கள் கிராமத்தாரால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சர்ச் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் கால்நடைகளுக்கு பொங்கல் படையலிடப்பட்டு மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.