உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லட்சுமிபுரத்தில் பொங்கல் விளையாட்டு விழா

லட்சுமிபுரத்தில் பொங்கல் விளையாட்டு விழா

கீழக்கரை : -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் 26ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சுமிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. லட்சுமிபுரத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பத்திர எழுத்தர் குமரேசன் முன்னிலை வகித்தார். கடந்த 2023 கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பானை உடைத்தல், கயறு இழுத்தல், கபடி, கோலப்போட்டிகள், வரவேற்பு நடனம் உள்ளிட்டவைகள் நடந்தது.இன்று ஜன.16 காலை முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. மாலையில் பள்ளி மாணவர்களின் நடன கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை