உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கல் பானை விற்பனை ஜோர்

பொங்கல் பானை விற்பனை ஜோர்

சிக்கல் : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன் கிராமங்களில் அதற்கான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு புதிய பொங்கல் பானை வாங்கி கொடுத்து அவற்றை விறகு அடுப்பில் பயன்படுத்த கூறியும் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் கொண்டாடி வருகின்றனர். காஸ் அடுப்பில் வைக்கும் பொங்கலை காட்டிலும் அடுப்பு மூட்டி அவற்றில் உரிய முறையில் நெருப்பு பற்ற வைத்து அவற்றின் மூலம் பொங்கல் வைக்கும் முறையில் பொங்கலோ பொங்கல் என கூச்சலிடுவது அலாதியானது. சிக்கலில் பாத்திரக்கடை வைத்திருக்கும் அரிகரன் கூறியதாவது:சிக்கல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். வெண்கலப் பொங்கல் பானை ரூ.600 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்கிறோம். கும்பகோணம் பகுதியில் இருந்து பொங்கல் பானைகளை மொத்தமாக ஆர்டர் செய்து விற்பனை செய்கிறோம். அடுப்பு மூட்டி அவற்றின் மீது பொங்கல் பானை வைத்து பாரம்பரியம் மாறாமல் பொங்கல் கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்று என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்