மேலும் செய்திகள்
வண்ண வில்
13 minutes ago
வானவில் மன்ற போட்டிகள்
23 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தே.மு.தி.க., ரத யாத்திரை ஊர்வலம் நெரிசலான பகுதிகளில் சென்றதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் விஜயகாந்த் சிலை பொருத்திய ரத யாத்திரை வாகனத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா சுற்றுப்பயணம் செய்கிறார். ராமநாதபுரத்தில் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து அரண்மனை வரை முளைப்பாரி, பால்குடம், மேள தாளங்களுடன் மாலை 6:30 மணிக்கு ரத யாத்திரையில் பயணித்தார். ஊர்வலம் துவங்கும் முன்பு பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் பட்டாசு வெடித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். மாநகராட்சி அலுவலகம், பஜார் பகுதிகளில் குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக ரத யாத்திரை வாகனம் செல்லும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகரின் முக்கிய நெரிசலான பகுதியில் ஊர்வலம் செல்ல அனுமதி கொடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரண்மனையில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: ஊர்வலம் துவங்கியவுடன் மின்சாரத்தை துண்டிக்கின்றனர். 'சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும்' என்பது போல் இந்த அரசு செயல்படுகிறது. அதிலும் ஒரு நன்மையாக மின்சாரம் இல்லாததால் அனைவரும் வெளியே வந்து ரத யாத்திரையை பார்த்தனர். வரும் தேர்தலில் தே.மு.தி.க., வரலாறு காணாத வெற்றி பெறும். அதன் பின் கச்சத்தீவை மீட்டெடுப்போம். ராமநாதபுரத்தை மிளகாய் மண்டலமாக மாற்றுவது, தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
13 minutes ago
23 minutes ago