| ADDED : டிச 31, 2025 05:20 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. இக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு சிவில் பிரிவு மாணவி வி. மதுமிதா அண்ணா பல்கலை மண்டலம் தடகளப் போட்டியில் பங்கேற்று குண்டுஎறிதல், வட்டு எறிதல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுபோன்று தொட்டியம், கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் நடந்த மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இறுதி ஆண்டு மின், மின்னணு பொறியியல் துறையைச் சேர்ந்த கா. கார்முவின், அண்ணா பல்கலை மண்டலம் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, மதுமிதா, கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலையில் நடந்த அகில இந்திய பல்கலை தடகளப் போட்டியில், அண்ணா பல்கலை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதித்துள்ள மதுமிதா, கார்முவின் ஆகியோரை கல்லுாரித் தாளாளர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா, முதல்வர் பெரியசாமி உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.