உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்சங்க விழா வில் மாணவர்களுக்கு பரிசு

தமிழ்சங்க விழா வில் மாணவர்களுக்கு பரிசு

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தமிழ்சங்கம் சார்பில் நடந்த தைத்திருநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.விழாவிற்கு மார்னிங்ஸ்டார் கம்ப்யூட்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளிமாணவர்களிடையே பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும்வழங்கப்பட்டது. கவிஞர் டாக்டர் சந்திரசேகர் தமிழ் என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய கவியரங்கம் நடந்தது. 'கன்னலாய் இனிக்கும்' என்ற தலைப்பில்கவிஞர் தர்மராஜன், 'இன்னல் களையும்' என்ற தலைப்பில் கவிஞர்மானுடப்பிரியன், 'உலகை உயர்த்தும்' என்ற தலைப்பில் கவிஞர் தேவிஉலகராஜ், 'செல்வமாய் சிறக்கும்' என்ற தலைப்பில் புலவர் அப்துல்மாலிக்,'உறவாய் மலரும்' என்ற தலைப்பில் கவிஞர் மணிவண்ணன் கவிதைகளை வழங்கினர்.'மறை மொழி தானே மந்திரம் என்ப' என்று செந்தில்குமார் பேசினார். சங்க தலைவர் அப்துல் சலாம், டாக்டர் மதுரம் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ