உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த பேச்சு, கட்டுரைப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் 6 முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 4ல் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் நடைபெற்றது.இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் இடம் ரூ.7000, 3ம் பரிசு ரூ. 5000 மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை