உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளைஞர்கள் சுயதொழில் துவங்க மானியமாக ரூ.7.93 கோடி வழங்கல்

இளைஞர்கள் சுயதொழில் துவங்க மானியமாக ரூ.7.93 கோடி வழங்கல்

ராமநாதபுரம் : மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில், புதிதாக தொழில்துவங்க இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.7 கோடியே 93 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.30 கோடியே 5 லட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளனகலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியுள்ளதாவது: மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், படித்த வேலை வாய்ப்பற்றஇளைஞர்கள் சுய தொழில் துவங்க தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க ரூ.5 லட்சம், ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கடனுதவியும் வழங்கப்படுகிறது.இதன்படி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2022 ஏப்.1 முதல் 2024 மார்ச் 31 வரை பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.7 கோடியே 93 லட்சம் மானியத்துடன் ரூ.30 கோடியே 5 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ