உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரியில் நலத்திட்ட உதவி வழங்கல்

கல்லுாரியில் நலத்திட்ட உதவி வழங்கல்

சாயல்குடி : கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் சந்திரசேகர பாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் சசிப்பிரியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுரை அமிர்தம் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜெய வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை சேர்மன் வேலுச்சாமி ஆகியோர் கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கன்னிராஜபுரம் பழனிச்சாமி, நிர்வாகிகள் மனுவேல், சுசீலா உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகி தர்மக்கண் அமிர்தம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயஷீலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ