மேலும் செய்திகள்
செயற்குழு கூட்டம்
4 minutes ago
மீனவர்களுக்கு மீன்பிடி தடை
8 minutes ago
இன்று இனிதாக ... (23.11.2025) ராமநாதபுரம்
12 minutes ago
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பயிரின் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்த்திருந்த நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மழை பெய்யவில்லை. நேற்று திருவாடானை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விவசாயிகள் கூறுகையில், வயலில் தேங்கி நிற்கும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இருந்த போதும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நிம்மதியாக உள்ளது என்றனர்.
4 minutes ago
8 minutes ago
12 minutes ago