உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெங்கலக்குறிச்சி ஊராட்சி கணக்கு முடக்கம்

வெங்கலக்குறிச்சி ஊராட்சி கணக்கு முடக்கம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு, போதிய ஆவணம் இல்லாததால் ஊராட்சி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான செலவினங்களுக்கு ஆவணங்கள் இல்லை. இது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சியின் வங்கி கணக்கு முடக்கபட்டுள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணியை, ஒன்றிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றிய கமிஷனர் தங்கராஜூ கூறியதாவது: வெங்கலகுறிச்சி ஊராட்சி கணக்குகள் தொடர்பாக அதன் தலைவர் மீது அடிக்கடி புகார்கள் வந்தன. ஊராட்சி பகுதிகளில் அடிப்படை தேவைகள் உட்பட பல பணிகளுக்காக செலவிடப்பட்ட செலவினங்கள் குறித்து ஆய்வு செய்யபட்டது. இதில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கபட்டு, ஆவணம் இல்லாமல் செலவிடபட்ட பணத்தை திரும்ப பெற திட்டமிட்டுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி