உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீருக்காக பல கி.மீ., மக்கள்... அலைச்சல் : கூட்டுகுடிநீர் திட்டங்கள் இருந்தும் வீண்

குடிநீருக்காக பல கி.மீ., மக்கள்... அலைச்சல் : கூட்டுகுடிநீர் திட்டங்கள் இருந்தும் வீண்

கமுதி : கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் பல கூட்டுகுடிநீர் திட்டங்கள் பெயரளவில் இருப்பதால் குடிநீருக்காக பல கி.மீ., தூரம் அலைய வேண்டிய அவலத்தில் மக்கள் உள்ளனர். கமுதி யூனியனில் பெரிய மற்றும் அதிக வருமானமுள்ள ஊராட்சி மண்டலமாணிக்கம். இங்கு கமுதி-பசும்பொன் கூட்டுக்குடிநீர் திட்டம், ராஜகம்பீரம் மற்றும் காவிரி கூட்டுகுடிநீர்த்திட்டம் என திட்டங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் குடிநீர் இல்லை என்பதுதான் உண்மையான நிலை. இந்த ஊரைச்சேர்ந்த இளைஞர்கள், 4 கி.மீ., சுற்றளவில் உள்ள பக்கத்து கிராமங்களுக்கு குடிநீருக்காக சைக்கிளில் செல்கின்றனர். ஒரு கிராமத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அடுத்த கிராமத்திற்கு சென்று அலைந்து குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர். பெண்களோ, திருச்சுழி ரோட்டில் உள்ள ஒரு ஊற்றிற்கு சென்று நீண்டநேரம் காத்திருந்து 2 கி.மீ., தூரம் குடங்களை சுமந்து வருகின்றனர். மாணவர்கள் படிக்க முடியாமல் அதிகாலையில் எழுந்தும், நள்ளிரவு வரையும் படிக்க வேண்டி உள்ளது. தூக்கம் கெட்டு படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தேர்வு நேரத்தில் காய்ச்சல் பரவி தேர்வு எழுத அவதிப்படுகின்றனர். சிலரோ படிக்க முடியாமல் தோல்வி அடைந்து மேற்படிப்பு கனவாகிவிடுகிறது. அடிப்படை வசதிக்காக ஊரை காலி செய்யும் நிலை உருவாகி வருகிறது. எனவே, குடிநீர் வசதி ஏற்படுத்த கலெக்டர் அருண்ராய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை