உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லூரி மலர் வெளியீட்டு விழா

கல்லூரி மலர் வெளியீட்டு விழா

கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனர் தின விழா கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதா கிருஷ்ணன், ராமநாதபுரம் மனமகிழ் மண்றம் தலைவர் வாசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கல்லூரி ஆண்டு விழா மலரை இயக்குனர் ஹபீப் முகம்மது வெளியிட்டார். முன்னதாக கணிதத் துறை தலைவர் சேக் அப்துல்லா வரவேற்றார். மேலாண்மைதுறை தலைவர் நாசர் வரவேற்றார். பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்லூரி மூத்த பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், கல்லூரி இயக்குனர் ஹபீப் முகம்மது பரிசு வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ