உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு ராமநாதபுரம் பா.ஜ., வரவேற்பு

ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு ராமநாதபுரம் பா.ஜ., வரவேற்பு

ராமநாதபுரம்; அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்ற தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஆடலரசு, அவரது மனைவி லலிதா பங்கஜவல்லி நேற்று ராமநாதபுரம் வந்தனர்.அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், பா.ஜ., நகராட்சி கவுன்சிலர் குமார், மாநில மகளிரணி துணைத்தலைவி கலாராணி, மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி, ஊடகப் பிரிவு செயலாளர் குமரன் உட்பட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விவேகானந்தர் ஸ்துாபியில் தம்பதியரை மலர் துாவி வரவேற்றனர். அங்கிருந்து அலங்கார வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது பா.ஜ.,வினர் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்