உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகனங்களால் விபத்து அதிகரிப்பு: தேவை போலீஸ் நடவடிக்கை

வாகனங்களால் விபத்து அதிகரிப்பு: தேவை போலீஸ் நடவடிக்கை

சாயல்குடி:சாயல்குடியில் மெயின் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளது.கிழக்கு கடற்கரை சாலை அமைத்ததில் இருந்து சாயல்குடியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடைகளும் அதிகரித்து விட்டன. சாயல்குடியை சுற்றியுள்ள 45 மேற்பட்ட கிராம மக்களும், இங்கு தான் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ரோட்டிலும், ரோட்டையொட்டியும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட மெயின் ரோட்டில் விபத்துகளும் அதிகம் நடக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் 27 விபத்துகள் நடந்துள்ளன. எனவே, ரோடுகளில் வாகனங்களை நிறுத்தப்படுவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி