உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பி.ஆர்.ஓ.,க்களாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

பி.ஆர்.ஓ.,க்களாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இம்மானுவேல் நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.இதுகுறித்து டி.எஸ்.பி., மாதவன் கூறியதாவது: முதுகுளத்தூரின் நான்கு நுழைவு பகுதிகளிலும் செக் போஸ்ட்கள் அமைக்கப்படும். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சந்தேகபடும்படியாக கூட்டமாக ஆட்கள் நின்றால் உடனடியாக கைது செய்யபடுவர். பட்டாசு வெடிக்கக்கூடாது. அனுமதிக்கபட்ட வழித்தடங்களை தவிர்த்து மாற்று பகுதிகளில் பயணித்தால் கைது செய்யபடுவர். வாகனங்கள், நபர்கள் வீடியோ மூலம் கண்காணிக்கபடுவர். விதிகளை மீறி செயல்படுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இன்று முதல் முதுகுளத்தூர் பஜார் பகுதிகளில் ஜாதி தலைவர்களின் நோட்டீஸ்கள், பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறதுமக்கள் தொடர்பு அதிகாரிகளாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதுகுளத்தூர், பேரையூர், தேரிருவேலி ஆகிய பகுதிகளுக்கு இன்ஸ்பெக்டர் சங்கர் 94433 26941, இளஞ்செம்பூர், கடலாடி, கீழச்செல்வனூருக்கு இன்ஸ்பெக்டர் பிச்சையா 94422 20697, கீழத்தூவலுக்கு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் 99948 77094ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை