உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை

கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை

ராமநாதபுரம் : வாகன வசதியில்லாததால் கடத்தலை தடுக்க முடியாமல் ராமநாதபுரம் கனிமவளத்துறையினர் திணறி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு உட்பட பல பகுதிகளில் மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. வருவாய் துறை அதிகாரிகள் தற்போது, இலவச பொருட்களை வழங்கும் பணிகளில் உள்ளனர். கனிமவளத்துறையினர் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.கடத்தலை தடுக்க வாடகை வாகனங்களையே நாடும் அவலம் உள்ளது. பாதுகாப்பை கருதி, மெதுவாகவே செல்கின்றனர். இதனால்வேகமாக செல்லும் மணல் கடத்தல் வாகனங்களை பிடிக்க முடியவில்லை. சவடு மண் எடுக்க லைசென்ஸ் பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்வதை தடுக்க முடியவில்லை. எனவே வாகனம் வழங்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை