உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

 அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் என ராமேஸ்வரத்தில் நடந்த மூன்று மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பாக்ஜலசந்தி கடலில் அத்து மீறி மீன்பிடிக்கும் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதால் நம் பகுதி மீனவர்கள் பாதிக்கின்றனர். அம்மீனவர்களை தடுத்து நிறுத்தக் கோரி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் டிச.,19ல் ஆர்ப்பாட்டம் செய்வது, இதன் பிறகு நடவடிக்கை எடுக்காவிடில் நடுக்கடலில் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் என தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ