உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்கத் தலைவர் சேசு தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மீனவர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்தில் 3 மற்றும் 4 நாட்கள் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் அதிக குதிரை திறன் இன்ஜின் பொருத்திய விசைப்படகு, நாட்டுப்படகுகளில் வாரம் முழுவதும் மீன்பிடிக்கின்றனர். இதனால் இலங்கை மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை இப்பகுதி மீனவர்கள் சேதப்படுத்தும் நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. எனவே பாக்ஜல சந்தி கடலில் மீன்பிடிக்க வரும் நாகை, காரைக்கால் மீனவர்களை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் இழுவை வலையை பயன்படுத்தும் விசைப்படகுகள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக இப்படகை ஒப்படைத்து மாற்று தொழிலுக்கு விரும்பும் மீனவர்களுக்கு தலா ரூ. 40 லட்சம் வழங்கி பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,28 முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது, ஜன.,31ல் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ