உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காருகுடி ஷட்டர் பகுதியில் நாணற்புற்கள்; தண்ணீர் செல்வதில் சிக்கல்

காருகுடி ஷட்டர் பகுதியில் நாணற்புற்கள்; தண்ணீர் செல்வதில் சிக்கல்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும் வைகை ஆற்றுப்பகுதியில் முறையான பராமரிப்பு இல்லாததால் காருகுடி ஷட்டர் பகுதியில் நாணற்புற்கள் மண்டி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொட்ங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் உள்ளது. வைகை ஆற்றிலிருந்து வரும் நீரை கண்மாய்க்கும், அங்கு நிறைந்த பிறகு அபரிமிதமாக வரும் நீரை கடலுக்கும், திருப்பும் வகையில் பொதுப்பணித்துறையினர் ஷட்டர்களை அமைத்துள்ளனர். கனமழைகாரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ராமநாதபுரம் கண்மாயை பாதுாக்கும் வண்ணம் இங்கு தடுப்பணை அமைக்கப்பட்டு கடலுக்கு திருப்பி விடுவதற்காக ஷட்டர்கள் காருகுடியில் உள்ளன. இந்த பகுதியினை பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை முறையாக பராமரிப்பு செய்யாததால் அங்கு நாணல்புற்கள் அதிகரித்து ஷட்டர் பகுதியில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நாணற்புற்களை அகற்றி முறையாக ராமநாதபுரம் கண்மாய்க்கு வைகை ஆற்றுநீர், மழைநீரை தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை