மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
17 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
19 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
19 minutes ago
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
22 minutes ago
ராமநாதபுரம்: மங்களூரு கடலில் தவறி விழுந்த முத்துபேட்டை மீனவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வருமானமின்றி சிரமப்படும் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். கீழக்கரை தாலுகா முத்துபேட்டை நடுத்தெருவை சேர்ந்த பிலிப்பார்த்லேமியா மனைவி சகாய லத்திசியா. மங்களூரு கடலில் மாயமான கணவரை கண்டுபிடித்து தர வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருணிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிலிப்பார்த்லேமியா கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன்பிடி தொழிலுக்கு சென்றார். அங்கு கடந்த அக்., 25ல் கடலில் தவறி விழுந்து விட்டதாக கூறுகின்றனர். அவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தேன். முடிந்தவரை கடலில் தேடி பார்த்து எந்த தடயமும் கிடைக்கததால் அவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர். எனது கணவர் இல்லாததால் குழந்தைகளுடன் சிரமப்படுகிறோம். எனவே கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதற்கு மாநில சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
17 minutes ago
19 minutes ago
19 minutes ago
22 minutes ago