உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடற்கரையில் குவிந்த துணிகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

 கடற்கரையில் குவிந்த துணிகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் மாரியூர் மன்னார் வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது. ராமநாதபுரம், சாயல்குடி, கடலாடி, கமுதி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கோயில் விழாக்கள் மற்றும் விசேஷ நிகழ்வுக்காக புனித நீராட வருகின்றனர். கடலில் குளித்துவிட்டு பக்தர்கள் போட்டுச் செல்லக்கூடிய துணிகள் அகற்றப்படாமல் ஏராளமாக பல இடங்களில் குவிந்த நிலையில் இருந்தன. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் துாய்மை பணியாளர்கள் மூலமாக கடற்கரை பகுதி மற்றும் உடை மாற்றும் அறை பகுதியில் பரவி கிடந்த துணிகள் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை