உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தேவ தீர்த்தம், அமுத தீர்த்த கிணறை புதுப்பித்து பூஜை

 தேவ தீர்த்தம், அமுத தீர்த்த கிணறை புதுப்பித்து பூஜை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உருக்குலைந்த தேவ மற்றும் அமுத தீர்த்தத்தை விவேகானந்தா கேந்திரம் புதுப்பித்து பூஜை செய்து தரிசனம் செய்தனர். ராமேஸ்வரத்தில் திருக்கோயில் வெளிப் பகுதியில் உள்ள நுாறுக்கு மேற்பட்ட தீர்த்தங்களை 80 சதவீதம் தீர்த்த கிணறுகள், குளங்களை ராமேஸ்வரம் விவேகானந்தா கேந்திரம் சார்பில் புதுப்பித்து பக்தர்கள் மீண்டும் தீர்த்தமாட நடைமுறை படுத்தியது. அதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான நம்புநாயகி அம்மன் கோயில் அருகில் உள்ள தேவ தீர்த்தம் குளம், அமுத தீர்த்த கிணறு பாழடைந்து கிடந்தது. இதனை விவேகானந்தா கேந்திரம் நிர்வாகிகள் மராமத்து செய்து புதுப்பித்தனர். நேற்று இரு தீர்த்தங்களிலும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் நிர்வாகி சரஸ்வதியம்மா தலைமையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை