மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
24-Sep-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலைய பயணிகள் ஆலோசனை கூட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர்.ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய பயணிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிமாறன், வீரபாகு, கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடைகளில் மாறி செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக வேண்டும். பயணிகள் அமரும் இடத்தில் விளக்குகள், மின் விசிறிகள் அதிகப்படுத்திட வேண்டும், என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
24-Sep-2024