உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் அவதி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரத்தில் ரோடு ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் அவதி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் மதுரை ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோட்டோர நடைபாதை, பஸ் ஸ்டாப்பை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. ராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம், வண்டிக்காரத் தெரு, கேணிக்கரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் நகரின் மையப்பகுதியாக நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடை பாதை, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. சில கடைக்காரர்கள் முழுமையாக கம்பி வைத்தும், கட்டடம் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.இதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாதது போல உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை