உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர  மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்

 நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர  மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சிக்கு ஆண்டு கட்டணம் செலுத்தியும், பஸ் ஸ்டாண்டில் இடம் தர மறுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சாலையோர விற்பனையாளர் சங்கம் சார்பில் சங்கதலைவர் ஆலடி ஈஸ்வரன், செயலாளர் முத்துவிஜயன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். நகராட்சி கமிஷனரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார். சாலையோர விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் கிழங்கு, வெள்ளரிக்காய், ஆப்பிள், கடலை விற்பனையில் 80க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சாலையோர வியாபாரிகள் நகராட்சிக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1900 வரை செலுத்தி ரசீது வாங்கியுள்ளனர். தற்போது பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். கடன் வாங்கி தொழில் செய்யும் பெண்கள் வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மக்கள், வாகனங்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் வியாபாரம் செய்வார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி