உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கமுதி: கமுதி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். செயலாளர் அய்யாதுரை, சி.ஐ.டி.யு.,மாவட்டச் செயலாளர் சந்தானம், மாவட்ட துணைத்தலைவர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தனர். ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், ஒ.ஹெச்.டி., ஆப்பரேட்டர்கள் சம்பள பட்டியலை உடனே வழங்கவும், ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்களுடைய சம்பளத்தை அரசு உத்தரவுப்படி மாதந்தோறும் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். 53 கிராம ஊராட்சி ஊழியர்கள் சங்கம், ஒ.ஹெச்.டி., ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி