உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருவாடு உலர்த்தும் பணியில் கிராமப்புற மீனவர்கள் ஆர்வம்

கருவாடு உலர்த்தும் பணியில் கிராமப்புற மீனவர்கள் ஆர்வம்

ஆர்.எஸ்.மங்கலம்: தேவிப்பட்டினம், திருப்பாலைக்குடி ஆகிய இடங்களில் பண்டிகை நாட்கள் என்பதால், விற்றது போக எஞ்சிய மீன்களை கருவாடுகளாக உலர்த்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, கடலூர், ஆற்றங்கரை, பனைக்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் ஏராளமான மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடி தொழில் செய்கின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்களை அருகிலுள்ள டவுனில் மீனவர்கள் விற்கின்றனர். கடந்த சில நாட்களாக பண்டிகை நாட்கள் என்பதால், பிடித்து வந்த மீன்கள் கடற்கரை பகுதியில் விற்பனை செய்தது போக எஞ்சிய மீன்களை வெயிலில் உலர்த்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை கருவாடுகளாக உணர்த்துவதில் மீனவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி