மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இத்தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மகிமை உண்டு. இதில் 22வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய மகிமை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளாக கோடி தீர்த்தத்தை, அரை லிட்டர் பாட்டிலில் பிரசாதமாக கோவில் 2, 3ம் பிரகாரத்தில் உள்ள கோவில் பிரசாத கடையில், தலா, 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.புனிதம் வாய்ந்த இந்த தீர்த்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, சில மாதங்களாக கோவில் கிழக்கு, மேற்கு வாசல் மற்றும் சன்னிதி தெருவில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கோடி தீர்த்தம் எனக் கூறி, 50 ரூபாய்க்கு விற்கின்றனர்.இதைத் தடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரியுள்ளனர்.தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சரவணன் கூறுகையில், ''கோவில் பெயரில் வியாபாரிகள் போலி கோடி தீர்த்தத்தை வடமாநில பக்தர்களை குறிவைத்து விற்கின்றனர். இதனை தடுக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறை அலட்சியமாக உள்ளதால் கோவில் புனிதம் கெடுகிறது,'' என்றார்.கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறுகையில், ''கோவில் கோடி தீர்த்தம் விற்பதற்கு தனியார் யாருக்கும் அனுமதி இல்லை. அவ்வாறு விற்பவர்களை கண்டறிய போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago