திருவாடானை, தொண்டியில் கலர் கோலப்பொடி விற்பனை அமோகம்
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் கலர் கோலப்பொடி விற்பனை களை கட்டியுள்ளது.மார்கழி பிறப்பை முன்னிட்டு கடை மற்றும்சரக்கு வாகனங்களில் கலர் கோலப் பொடிகள்விற்பனை துவங்கியுள்ளது. சில வண்ணங்களை கோலப்பொடியுடன்கலந்தும், வேறு சில வண்ணங்கள் மணலுடன் கலந்தும் விற்கப்படுகிறது.கிராமங்களில் பெண்கள்சூரிய உதயத்திற்கு முன் எழுந்து விதவிதமாக கோலங்களை இடுவார்கள். வெள்ளை, சிவப்பு, ரோஸ், பச்சை, நீலம், மஞ்சள், ஆரஞ்ச் என பல்வேறு வண்ணங்களில் கலர் கோலப்பொடிகள் விற்பனைக்கு வந்துஉள்ளது. பெண்கள் இவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். 200 கிராம் கோலப்பொடி ரூ.10 முதல் 15 வரை விற்பனை செய்யபடுகிறது. கோலம் போடத்தெரியாதவர்களின்கவலையை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு மாடல்களில் கோல அச்சுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: நவீன உலகில் நாகரிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் பண்டிகை காலங்களில் வண்ண, வண்ண கோலமிடுவது இன்னமும் மாறாமல் உள்ளது. குறிப்பாக மார்கழி மாதத்தில் வண்ண கோலமிடும் பழக்கம். மக்களிடையே அதிகளவில் இருக்கும்.அதன்படி இந்த ஆண்டு மார்கழி துவக்கத்திலேயே கோலப்பொடி விற்பனை அமோகமாக உள்ளது. பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.