உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பள்ளி, கல்லுாரியில் சமத்துவ பொங்கல் திருவிழா 

ராமநாதபுரம் பள்ளி, கல்லுாரியில் சமத்துவ பொங்கல் திருவிழா 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகள், பல்வேறுஅமைப்புகள், அலுவலகங்களில் பொங்கல் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் நடந்த பொங்கல்விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னதுரைஅப்துல்லா தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.மாணவர்களுக்குபல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறைபேராசிரியை கவிதா செய்திருந்தார்.*ஜாஸ் கல்லுாரி: அம்மா பூங்க எதிரில் உள்ள ஏரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் கலாசார நடனம், உறியடித்தல், கயறு இழுத்தல் போட்டிகள் நடந்தது. பாத்திமா கல்வி குழும தாளாளர் முகமது சலாவுதீன் தலைமை வகித்தார். பொங்கல் வைத்துவணங்கினர். *செய்யது ஹமீதா கல்லுாரி வளாகத்தில் நடந்தபொங்கல் திருவிழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஷர்மிளா, நிர்வாக இயக்குநர் ஹாமீது இப்ராஹிம், இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். தமிழர் பண்பாட்டுஅடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் உறியடித்தல்,கும்மிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.மாவட்ட மைய நுாலகம்: ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலக வளாகத்தில்பொங்கல் விழா நடந்தது. பொறுப்பு மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, வாசகர் வட்ட தலைவர் மங்கள சுந்தரமூர்த்தி மற்றும் நுாலக பணியாளர்கள் பங்கேற்றனர்.*ராமநாதபுரம் மதுரை ரோடு சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவிற்கு தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு ரங்கோலி, பட்டிமன்றம், பானை உடைத்தல், லக்கி கார்னர், நீர் நிரப்புதல் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டது.*ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா பெண்கள் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டா டினர். மாணவிகள் பொங்கல் வைத்தனர். பின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய நடன கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முதல்வர் ஆனிபெர்பட் சோபி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுபலட்சுமி, முன்னாள் கவுன்சிலர் ஜீவானந்தம், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.-----திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டைராஜ், சந்திரமோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் 47 ஊராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும் பேச்சுப்போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.* பரமக்குடி புதுநகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை ஜெயசுதா வரவேற்றார். நடனம், நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கயறு இழுத்தல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அணில் நன்றி கூறினார்.முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆரோக்கிய மேரி தலைமை வகித்தனர். பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடினர். மாணவர்களின் பாரம்பரிய நடனம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முதுகுளத்துார் அருகே பெரிய கையகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சகாயம் தலைமை வகித்தார். தேரிருவேலி ஊராட்சி தலைவர் அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைவர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ஜானகி, அன்புகண்ணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். கமுதி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தாசில்தார் சேதுராமன் தலைமை வகித்தார். அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.முதுகுளத்துார் சாலினி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் ராணி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பி.டி.ஓ., உம்முல் ஜாமியா, சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ மூட்டியதிலிருந்து பொங்கல் பானையில் அரிசி, வெல்லம், மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பானையில் இட்டு அனைவருக்கும் பொங்கல் தயார் செய்து அசத்தினார். இஸ்லாமிய பெண் அதிகாரி பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு, பெங்கல் தயார் செய்ததை அப்பகுதி மக்கள் குலவையிட்டு பெண் அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழு வட்டார தலைவர்கள் மோகன், நாகமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை