உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை முனிராஜ் அரசு பஸ்மோதிய விபத்தில் இறந்தார். அதற்குரிய இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.பிச்சை மூப்பன் வலசை முனியசாமி மகன் முனிராஜ் 28, இவர் 2010ல் ஏர்வாடியில் இருந்து தர்காவிற்கு சைக்கிளில் சென்றபோது ஏர்வாடி தர்காவில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் முனிராஜ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். முனிராஜ் இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை முனியசாமி, தாய் சின்னப்பிள்ளை, தங்கை செல்வி ஆகியோர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் முனிராஜ் இறப்பிற்கு ஏழு லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடாக வழங்க காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 2019 ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்ததொகையை வழங்காததால் வட்டியுடன் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்து 862 வழங்க உத்தரவிடக்கோரி முனியசாமி தரப்பினர் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி குமரகுரு விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.நீதிமன்ற ஊழியர்கள் ராமநாதபுரத்திலிருந்து முதுகுளத்துார் சென்ற பஸ்சை ஜப்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ