உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் திருட்டு: 3 பெண்கள் கைது

தொடர் திருட்டு: 3 பெண்கள் கைது

முதுகுளத்துார், : -முதுகுளத்துார் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த பார்வதி, பாகம்பரியாள், லெட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.முதுகுளத்துார் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சாந்தி 29. டிச.16ல் சொந்த ஊரான தேவர்குறிச்சிக்கு பஸ்சில் சென்றுள்ளார். அதன் பின் பார்த்த போது பையில் வைத்திருந்த ரூ.2500, ஏ.டி.எம்., கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து முதுகுளத்துார் போலீசில் புகார் அளித்தார். முதுகுளத்துார் பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்த போது பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.முதுகுளத்துார் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமநாதபுரம் செல்ல திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பார்வதி 51, பாகம்பிரியாள் 40, சென்னை வண்டலுார் லெட்சுமி 42, ஆகிய மூன்று பேர் நின்று கொண்டு இருந்தனர்.அவர்களை பார்த்த சாந்தி மற்றும் அவரது தாய் பிடித்து முதுகுளத்துார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் முதுகுளத்துார் பகுதியில் கோயில் திருவிழாக்கள், வாரச்சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து பிக் பாக்கெட் முறையில் மணிபர்ஸ் திருடியது தெரிய வந்தது.முதுகுளத்தூர் எஸ்.ஐ.,சத்யா வழக்கு பதிந்து 3 பெண்களையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி