| ADDED : டிச 10, 2025 06:41 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் நவ.,4ல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வந்தனர். படிவம் வழங்கும் போது பலர் வீடு இடமாறி சென்றவர்களை கண்டறிய முடியாதவர்களை ஆப்சென்ட் என்றும் குறிப்பிட்டு அந்தந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களே படிவங்களை வைத்துள்ளனர். ஷிப்ட், ஆப்சென்ட் என குறிப்பிட்ட படிவங்களின் நிலை உண்மை தானா என சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: நாளை (டிச.,11) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் ஒருவரது பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மும்முரமாக ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கட்சியினருக்கும் பணிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் மக்கள் அதில் பிழைகள், விவரங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தெரிவித்து சரி செய்துக் கொள்ளலாம் என்றனர்.